அரசியல்

ஓபிஎஸ் சொதப்பியது எங்கே? | அடுத்த நகர்வும் எதிர்காலமும்

Rathish.R

அதிமுக-வை மீட்கப் போகிறேன் என்று சொல்லி ‘தொண்டர்கள் மீட்புக் குழு’வை தொடங்கிய ஓபிஎஸ், 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் அதிமுக-வையே எதிர்த்து நின்று ‘சாதனை’ படைத்தார். அங்கே அதிமுக-வை மூன்றாமிடத்துக்குத் தள்ளி சந்தோஷப்பட்டுக் கொண்டவர், “எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக-வில் இணையத் தயார்” என அப்ளிகேஷன் போட்டார்; பழனிசாமி பதிலே சொல்லவில்லை.

பழனிசாமியைத் சீண்டிப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு மகன் சகிதம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதனால் அதிமுக-வினர் மத்தியில் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ‘கழகமாக’ மாற்றப்போவதாக புதுக் கலகத்தை ஆரம்பித்திருக்கிறார். அத்துடன், “டிசம்பர் 15-ம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்” என்று பழனிசாமிக்கு மீண்டும் பாச்சா காட்டி இருக்கிறார்.

டிசம்பர் முதல் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போதாவது தங்களுக்கு ஏதாவது காரியம் நடக்குமா என்ற கணிப்பில்தான் ‘டிசம்பர் 15’ என்று கெடு வைத்திருக்கிறார் ஓபிஎஸ். டிசம்பர் 15-ல், திமுக கூட்டணியா தவெக கூட்டணியா என அவர் முடிவெடுக்கலாம் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT