அரசியல்

காங்கிரஸுக்கு திமுக வைத்த ‘செக்’ - கூட்டணி ‘நிலவரம்’ என்ன?

செய்திப்பிரிவு

சில தினங்களுக்கு முன்பு பிரவீன் சக்கரவர்த்தியையும் மாணிக்கம் தாகூரையும் தனியே அழைத்துப் பேசினார் ராகுல் காந்தி. இவர்கள் இருவரும் ‘அதிகாரத்தில் பங்கு’ கோஷத்தை முன்னெடுப்பவர்கள் என்பதால் இவர்களை ராகுல் அழைத்துப் பேசியது பல்வேறு ஊகங்கங்களை உலவவிட்டது. இனிமேல் இருவரும் அடக்கி வாசிக்கலாம் என்றும் சொல்லப்பட்ட நிலையில், மீண்டும், “அதிகாரப் பகிர்வு அவசியம்; ஆட்சியில் பங்கு எங்களின் உரிமை” என முழங்கினார் மாணிக்கம் தாகூர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. இதுபற்றி ராகுல் காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை ஆகியோர் கேட்டால் பதில் சொல்லலாம் மற்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று சொன்னார். இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் சீனியர்கள் சிலர், “கூடுதல் சீட், ஆட்சியில் பங்கு என எங்கள் தரப்பில் திமுக-வுக்கு அழுத்தம் தரப்பட்டாலும் இன்னொரு கூட்டணிக்குப் போவது குறித்து நாங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை. அது தெரிந்துதான் ஸ்டாலினும் இந்த விஷயத்தில் நிதானம் காக்கிறார்.

          

காங்கிரஸ் தலைமையும் இந்த விஷயத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாமல் இருப்பதற்குக் காரணம் தேசிய அளவில் காங்கிரஸுக்கு கைகொடுக்கும் நம்பிக்கையான தோழனாக திமுக இருப்பதுதான். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டால் தேசிய அரசியலில் இரண்டு கட்சிகளுக்குமே இழப்புதான். இதையெல்லாம் ஒன்றுக்கு பலமுறை யோசித்த பிறகு, ஆட்சியில் பங்கு என்ற தமிழக காங்கிரஸாரின் கோரிக்கைக்கு “தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கலாம்” என்ற ஒரு பதிலையாவது திமுக-விடம் காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கிறது” என்றனர்.

இந்த நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தரப்பு ராகுலிடம், “காங்கிரஸுக்கு எப்படியும் 35 சீட்களுக்குக் குறையாமல் வாங்க வேண்டும். மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகள், வாரியங்கள் உள்ளிட்டவற்றில் காங்கிரஸுக்கான பங்கு குறித்தும் இப்போதே ஒப்பந்தம் போட்டுக் கொள்வது நல்லது. அப்போதுதான் தமிழக காங்கிரஸாரை ஓரளவுக்காவது திருப்திப்படுத்த முடியும்” என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், “திமுக - காங்கிரஸ் இடையே​யான உறவு என்​பது மிக நீண்டகால மற்​றும் கொள்கை ரீதி​யான கூட்​ட​ணி. பல்​வேறு விவ​காரங்​களில் மத்​திய அரசை எதிர்த்து நாங்கள் இணைந்து போராடி வரு​கிறோம். அந்த ஒற்​றுமை இப்போதும் தொடர்​கிறது. தேர்​தல் நெருங்​கும் வேளையில், எங்​களுக்கும் எங்​களு​டைய கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கும் தெளி​வான இலக்​கு​கள் உள்​ளன. தொகு​திப் பங்கீடு பேச்​சு​வார்த்​தைக்​காக நாங்​கள் காத்​திருக்​கிறோம்.

கூட்​டணி ஆட்சி குறித்து கட்​சி​யில் இருக்​கும் தனி​நபர்​கள் யாராவது கருத்​துச் சொன்​னால், அது அவர்​களின் சொந்​தக் கருத்துகளே தவிர, அதற்​கும் கட்​சிக்​கும் எந்​தச் சம்​பந்​த​மும் இல்​லை. கூட்​டணி மற்​றும் அதன் முடிவு​கள் குறித்து அகில இந்​தி​யத் தலைமை மட்​டுமே இறு​தி முடிவெடுக்​கும்” என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் கே.சி.வேணுகோ​பால்.

முன்​ன​தாக நடந்த மாவட்ட தலை​வர்​கள் கூட்​டத்​தில், ‘கூட்டணிக் குறித்து பொது​வெளி​யில் பேசக்​கூ​டாது. மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​பது உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. விருதுநகர் காங்கிரஸ் எம்​.பி. மாணிக்​கம் தாகூர் மற்​றும் அகில இந்​திய நிர்​வாகி பிர​வீன் சக்​ர​வர்த்தி ஆகியோர் திமுக-வுக்கு எதி​ரான கருத்​துகளை பேசி வந்தனர். இந்​நிலை​யில், பெங்​களூரு​வில் மல்​லி​கார் ​ஜுன கார்​கேவை சந்தித்த தமிழக தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மேலிட உத்​தரவை மீறி பேசி வரும் மாணிக்​கம் தாகூர், பிர​வீன் சக்​ர​வர்த்தி மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மனு அளித்​தார்.

இதற்​கிடையில், சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுத்​தால் மட்​டுமே கூட்​டணி தொடர்​பான பேச்​சு​வார்த்​தைக்கு முன்​வரு​வோம் என்று திமுக தரப்​பில் ‘செக்’ வைக்கப்பட்டுள்ளதாக தெரி​கிறது. இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT