தமிழகத்தில் எந்தக் கட்சியும் 118 தொகுதிகளை பெற்றிருக்கவில்லை எனில் அரசியலமைப்பு சட்டத்தின் 4 வழிமுறைகளை பின்பற்றி ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். முதலாவது, தேர்தலுக்கு முன்பே அரசியல் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்திருந்தால் அந்த கூட்டணியை அழைக்கலாம். இரண்டாவது, அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி போதிய ஆதரவுடன் இருந்தால் அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கலாம். மூன்றாவது, தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து இருந்தால் அந்த கட்சிகளை அழைக்கலாம். நான்காவது, வெளியில் இருந்து பெறப்படும் ஆதரவுடன் பெரும்பான்மையற்ற மைனாரிட்டி ஆட்சியை அமைக்கும் கட்சியை அழைக்கலாம்.
தற்போது விஜய் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோராமல் கூட்டணி ஆட்சி எனக் கூறி காங்கிரஸ் ஆதரவு கடிதத்தையும் சேர்த்து ஆளுநரிடம் கொடுத்ததுதான் வாய்ப்பை நழுவ விட்டதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்யிடம் ஆளுநர் மாளிகையிலேயே பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறியது அரசியலமைப்பு சட்ட ரீதியாக சரியா, தவறா என சென்னை உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் அளித்த விளக்கத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.