“இவரெல்லாம் ஜெயிக்க வாய்ப்பில்லை” என்று வியூகப் புலிகளால் ஒதுக்கப்பட்ட விஜய், தனித்தே நின்று 108 தொகுதிகளை வென்று ஆட்சியையும் தக்கவைத்து விட்டார். ஆனால், அவரால் உருவாக்கப்பட்ட வெற்றி அலையானது தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, விஜய் புயலானது அதிமுக-வையும் விட்டுவைக்கவில்லை. தேறுமா என்று சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட தவெக அரசு, 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று சுலபமாக தேறிவிட்டது. ஆனால், தமிழகத்தின் பிற கட்சிகள்தான் விஜய் புயலால் விடை தெரியாத புதிருக்கு ஆளாகி இருக்கின்றன என்பதை நிறுவும் எக்ஸ்ப்ளைனர் இது.