அரசியல்

ஆதவ் அர்ஜுனா அசைன்மென்ட்... தவெகவின் ‘மிஷன் அதிமுக’ - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, நான்கு முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் நடிகர் விஜய்யின் கட்சியான தவெக. 2029 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக தனித்துப் போட்டியிட்டால் நிலைமை என்னாகும்... அதற்கு முன்னதாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி வாக்குப் பதிவு நடக்கலாம் என்று வரும் செய்திகளும் அதிமுக வட்டாரத்தை ஆனந்தப்பட வைத்திருக்கிறது.

அப்படி வந்தால் ‘விசில்’ பலத்தில் நிச்சயம் உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பலரும் தற்போது தவெக-வை நோக்கி நகரத் தயாராகி வருகிறார்கள். இதை மனதில் வைத்தே, அந்த 6 மாத கெடுவை வைத்திருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. அதிமுக-வை மெல்ல மெல்லக் கரைக்கும் அமைச்சர் ஆதவ்வின் திட்டத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT