முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இரு வாரங்களை கடந்துள்ளது. இந்த இரு வார காலகட்டத்தில் சில அமைச்சர்களின் பேச்சுக்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிலரின் அணுகுமுறைகள் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன.
முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் செங்கோட்டையனை தவிர மற்ற அனைவருமே புதியவர்கள்தான். அதிலும் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது தமிழக மக்களுக்கே நம்பிக்கையளிக்கும் விஷயமாக உள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்ற, எளிமையானவர்கள் அதிகாரத்தை அடைந்துள்ளதை மக்கள் ஆச்சர்யத்துடன் வரவேற்பதை பார்க்க முடிகிறது. சில அமைச்சர்களின் கருத்துகள் விமர்சனங்களிலும் சிக்கியுள்ளன.
சீனியர்கள் ஒருபுறம் இருக்க, புதிதாக பொறுப்புக்கு வந்த அமைச்சர்கள் சிலரின் பேச்சுகள் இணையத்தில் பகடிக்கு உள்ளாகியுள்ளன. இது குறித்து சுருக்கமாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.