அரசியல்

ஒரு பைசா செலவில் தங்க மோதிரமா? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு தங்க மோதிரம் வழங்​கும் ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ திட்​டத்தை முதல்​வர் விஜய் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைக்க உள்​ளார். இந்தத் ​திட்​டத்​தின் ​கீழ் தமிழகம் முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் பிறக்கும் ஒவ்​வொரு குழந்தைக்​கும் ஒரு கிராம் தங்க மோ​திரம் வழங்​கப்பட உள்​ளது.

முதல்​கட்​ட​மாக ஜூன் முதல் செப்​டம்​பர் வரையி​லான 4 மாதங்​களுக்கு 1,28,499 மோதிரங்​கள் கொள்​முதல் செய்யப்பட உள்​ளன. தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​கள் கழகத்​தால் கடந்த ஜூலை 14-ம் தேதி இந்தத் ​திட்டத்துக்கான டெண்​டர் கோரப்​பட்​டது. இதில் 11 முன்னணி நிறு​வனங்​கள் பங்​கேற்​றன. தங்​கம் விலையைத் தவிர்த்​து, ஒரு மோதிரத்​துக்​கான செய்​கூலி, சேதா​ரம், காப்​பீடு, பேக்​கிங் மற்​றும் பிஐஎஸ் தரமுத்​திரை உள்​ளிட்ட அனைத்து செல​வு​களை​யும் நிறு​வனங்​கள் விலை​யாக குறிப்​பிட வேண்​டும் என்​பது டெண்​டர் நிபந்தனை ஆகும்.

அதன்​படி வெறும் ஒரு பைசா என்ற மிகக் குறைந்த விலைப்​புள்​ளி​யில் தங்க மோதிரம் செய்து தரு​வ​தாக குறிப்​பிட்ட ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனத்​துக்கு 70 சதவீத​ம், அதே விலைக்கு செய்​துதர சம்​ம​தித்த கல்​யாண் ஜுவல்லர்ஸ் நிறு​வனத்​துக்கு 30 சதவீத​ம் என மோதிரங்கள் தயாரிக்க டெண்​டர் வழங்​கப்​பட்​டுள்​ளது. தற்​போதைய சந்தை சூழலில் வெறும் ஒரு பைசா செல​வில் தங்க மோதிரத்தை வடிவ​மைத்​துக் கொடுப்​பது சாத்​தி​ய​மா என்பதை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT