நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியிருக்கிறார். அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் குறித்து 45 நிமிடம் இருவரும் ஆலோசித்தனர். அதாவது, பாஜக-விலிருந்து விலகி அண்ணாமலை புதிய அரசியல் அமைப்பைத் தொடங்கியிருப்பது, அந்த இயக்கத்தில் பாஜக-வினர் பலரும் தொடர்ந்து இணைந்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், அண்ணாமலையின் புதிய கட்சிக்கு ரஜினி ஆதரவு கொடுப்பார் என வெளியாகி வரும் தகவல்களை, ரஜினி மறுத்ததாகவும், அவர் யாருக்கும் ஆதரவு இல்லை என இந்த சந்திப்பின்போது தெளிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.