வளரும் கட்சிக்குள் கோஷ்டிகள் தலை தூக்குவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அந்த விதத்தில் விஜய்யின் தவெக-வுக்குள் அதற்குள்ளாகவே கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தவெக நிர்வாகிகள் சிலர், “முன்பு புஸ்ஸி ஆனந்தே அனைத்தையும் கவனித்து வந்தார். ஆனால், கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொறுப்புகளை பலருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார் விஜய். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பொறுப்பாளர்களையும் நியமித்திருக்கிறார்.
இதுவே, ஆனந்தை ஓரங்கட்டுவதற்கான முதல் படி மாதிரித்தான் தெரிகிறது. இதை தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ், ஜான் ஆரோக்கியசாமி என ஆளாளுக்கு செல்ஃப் கோல் அடிக்கப் பார்க்கிறார்கள். ” என்றனர். > முழுமையாக வாசிக்க > யாருக்கு அதிகாரம்? - கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் தவெக