அரசியல்

அமெரிக்க டாலர் ‘ஆதிக்க’ வரலாறு - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

உலகின் பெரும்பகுதி நாடுகளால் ஏற்கப்பட்ட கரன்சியாக அமெரிக்க டாலர் மாறியிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு கிடைத்திருக்கும், இந்த அங்கீகாரம், அந்நாட்டின் அரசியல் பரிணாம வளர்ச்சியை மட்டுமல்லாமல் அசாதாரண பொருளாதார ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது. அமெரிக்க டாலர் என்பது அந்நாட்டின் தேசிய நாணயம் என்பதை விட வேறு பல முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. உலக நாடுகளின் மத்திய வங்கிகளால், இருப்பு வைக்கப்படும் கரன்சியாக டாலர் மாறிவிட்டது.

ஒரு நாட்டுக்கும், மற்றொரு நாட்டுக்கும் இடையே எல்லை கடந்த வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடத்தப்படுகிறது, உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகத்துக்கும் டாலர் ஆதாரமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் வியாபாரம் டாலரில் நடந்ததால், எரிபொருள் சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது. உலக நாடுகள் கையிருப்பில் டாலர் வைத்திருப்பது, டாலரில் கடன் பெறுவது, டாலரில் வர்த்தகம் நடைபெறுவது போன்ற முறைகள் இருக்கும் வரை டாலரின் தாக்கம் இருக்கும் என்று கூறும் இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ, அமெரிக்க டாலர் ‘ஆதிக்க’ வரலாற்றை தெளிவாக முன்வைக்கிறது.

SCROLL FOR NEXT