அரசியல்

கம்யூ. ‘கவலை’, நாதக ‘ஷாக்’, பாமக ‘சம்பவம்’ @ தாராபுரம், மதுராந்தகம்

செய்திப்பிரிவு

மது​ராந்​தகம், தாராபுரத்தில் தனித்​துக்களம் கண்ட கம்யூனிஸ்ட் கட்​சிகள் தங்​களது டெபாசிட்டை இழந்து படுதோல்வியை சந்​தித்​துள்​ளன. மது​ராந்​தகத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்​பாள​ராக பி.சுகந்​தி​யும், தாராபுரத்தில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் பி.லட்சுமணனும் போட்​டி​யிட்​டனர். தேர்​தல் பிரச்சாரத்தின்​போது தவெக அரசு மீது கடும் விமர்​சனங்​களை முன்​வைத்தனர். வாக்கு எண்​ணிக்கை முடி​வில் பி.சுகந்தி 1,986 வாக்​கு​களை​யும், பி.லட்​சுமணன் 1,157 வாக்​கு​களை​யும் மட்டுமே பெற்​று டெபாசிட் இழந்​தனர்.

தோல்வி குறித்​து, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் கூறுகையில், “இந்த தேர்​தல் முடிவு தெரிந்​தது​தான். ஒரு அரசி​யலுக்​காக இயங்கி வரு​கிறோம். எங்​களுக்கு கிடைத்த வாக்​கு​கள் மாசுப​டாத வாக்​கு​கள். எங்​களுக்கு மரணமும் கிடை​யாது. தோல்​வி​யும் கிடையாது” என்றார். இதே​போல் மார்க்சிஸ்ட் மாநில செயலா​ளர் பெ.சண்​முகம் கூறும்​போது, “பணபலம், அதிகார பலம் எது​வுமின்றி களம் கண்​டோம். வீதிகளி​லும் எங்களது பயணம் தொடரும்” என்றார். ​தேர்​தல் முடிந்த பிறகு தவெக​வுக்கு ஆதரவை கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வாபஸ் பெற​போவ​தாக செய்​தி​கள் பரவி வந்​தது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத்​தேர்​தலில் தனித்​துக் களம் கண்ட நாம் தமிழர் கட்சி இரு தொகு​தி​களி​லுமே படு​தோல்​வியை சந்தித்து டெபாசிட்டை பறி​கொடுத்​தது.வாக்கு எண்ணிக்கை முடி​வில் மது​ராந்​தகம் தொகு​தி​யில் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் ஜி.ஜானகி​ராமன் வெறும் 2,709 வாக்​கு​களை மட்​டுமே பெற்று நான்​காவது இடத்​துக்​குத் தள்​ளப்​பட்​டார். கடந்த 2026 பொதுத்​தேர்​தலில் இதே தொகுதி​யில் அவர் பெற்ற 5,268 வாக்​கு​களில் ​பா​தியை மட்டுமே இம்​முறை பெற முடிந்​தது.

அதே​போல தாராபுரம் தொகு​தி​யிலும் வேட்​பாளர் எம்.கார்த்திகா 5,268 வாக்​கு​கள் மட்​டுமே பெற்று டெபாசிட்டை இழந்​தார். கடந்த பொதுத்​தேர்​தலில் இங்கு அக்​கட்சி வேட்​பாளர் திவ்யா வாங்​கிய 6,026 வாக்​கு​களை​ விட​வும் இது குறைவு என்​பது குறிப்​பிடத்​தக்​கது. 2026 சட்டப்​பேர​வைத் தேர்​தலில் படு​தோல்வி அடைந்து வாக்கு வங்கி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீத​மாக குறைந்த நிலையில், இந்த இடைத்​தேர்​தலிலும் டெபாசிட் இழந்தது தொண்​டர்​களை அதிர்ச்​சி​யில் ஆழ்த்​தி​யுள்​ளது.

தேர்​தல் பிரச்​சா​ரங்​களின்​போது சீமானின் பேச்சை கேட்க கூடும் கூட்டமும், மில்​லியன் கணக்​கிலான சமூகவலைதள வியூஸ்​களும் வாக்குகளாக மாறவில்லை என அரசி​யல் விமர்​சகர்​கள் விமர்​சிக்​கத் தொடங்கியுள்ளனர். இதனால் கட்​சித் தொண்​டர்​கள்​ கவலை அடைந்​துள்​ளனர்​.

இதனிடையே, பழனி​சாமி மீதான கோபத்​தா​லும், சவுமியா அன்புமணி அமைச்​ச​ராகும் தகவலால் மது​ராந்​தகம், தாராபுரத்தில் தவெக வேட்​பாளர்​களுக்கு பாமக​வின் வாக்​கு​கள் சென்​றுள்​ளதும் கவனம் ஈர்த்துள்ளது.

இரு தொகுதிகளிலும் கணிசமான வாக்​கு​களை​ பாமக வைத்​துள்​ள​தால், அவை யாருக்குச் செல்​லும் என்ற நிலை ஏற்​பட்​டது. தவெக அரசுக்கு ஆதரவு தரும் கம்​யூனிஸ்ட் கட்சிகள் அரசு மீது தொடர்ந்து விமர்​சனங்​களை வைப்பதை​யும், அமைச்​சர​வை​யில் இடம் பெற்றாலும் அவ்வப்​போது விசிக தலைவர் விமர்​சனம் செய்​வதை​யும் முதல்​வர் விஜய் விரும்பவில்லை. எனவே 4 எம்​எல்ஏக்​கள் வைத்​துள்ள பாமகவை, கூட்​ட​ணியில் சேர்க்க முடிவு செய்த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, கடந்த 2 மாத​மாக தவெக கூட்​ட​ணி​யில் பாமக இணைய இருப்​ப​தாக​வும், அக்​கட்​சி​யின் சட்​டப்​பேரவை குழு தலை​வர் சவுமியா அன்​புமணி அமைச்சரவை​யில் இடம்பெற உள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளியாகின. இதனால் பாமக தொண்டர்​கள் மகிழ்ச்சியில் உள்​ளனர். இந்தச் சூழ்​நிலை​யில், பாமக​வின் வாக்​கு​கள் தவெக வேட்​பாளர்​களுக்கு சென்​றுள்​ளன.

இது தொடர்​பாக பாமகவினரிடம் கேட்டபோது, “2021-ம் ஆண்டில் அதி​முக ஆட்​சி கடைசி நேரத்​தில் வன்னியர்களுக்​காக 10.5 சதவீத இடஒதுக்​கீட்​டை, அப்​போதையை முதல்​வர் பழனி​சாமி வழங்​கி​னார். ஆனால், அது கிடைக்​காமல் போய்​விட்​டது. அதுதொடர்​பாக பழனிசாமி இது​வரை பேச​வில்​லை.

இதனால், வன்​னியர் சமூகத்​தினரும், பாமக​வினரும் அதிமுக தலைமை மீது கோபத்​தில் உள்​ளனர். மத்​திய அரசின் சாதி​வாரி கணக்கெடுப்பு முடிந்த பின்​னர் தமிழக அரசு சமூகநீதி கணக்​காய்​வினை நடத்​தும் என்று தவெக அரசு அறி​வித்​தது. இதற்​காக, தவெக அரசை பாமக பாராட்டியது. அதனால், மது​ராந்​தகம், தா​ராபுரத்​தில் பாமக​வின்​ வாக்​கு​கள்​ தவெக வேட்​பாளர்​களுக்​கு சென்றுள்​ளது” என்று பாமகவினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT