அரசியல்

சென்னை சொத்து வரி பிரச்சினை... நடந்தது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

சென்னை மாநக​ராட்​சி​யில் 13 லட்​சத்து 30 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சொத்து உரிமை​யாளர்​கள் உள்​ளனர். இவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரு​வாய் கிடைக்​கிறது. மாநக​ராட்​சிக்கு அதிக வரு​வாய் இதன் மூலமே கிடைக்கிறது. ஏற்​கெனவே சொத்து உரிமை​யாளரின் சுயம​திப்​பீடு அடிப்​படை​யில் சொத்து வரி நிர்​ண​யிக்​கப்​பட்டு மாநக​ராட்சி சார்​பில் வசூலிக்​கப்​பட்டு வந்​தது.

அதன் பின்​னர் நவீன தொழில்​நுட்​பங்​களை கொண்டு துல்லிய சொத்து வரி மதிப்​பீட்டை மாநக​ராட்சி மேற்​கொண்டு வரு​கிறது. இதில் குறை​வாக மதிப்​பிடப்​பட்ட சொத்​துக்கு மறும​திப்​பீடு செய்​து, அவர்​களுக்கு மட்​டும் மாநக​ராட்சி தரப்​பில் கடிதம் அனுப்​பப்​பட்டு வரு​கிறது. இதனிடையே, சுமார் 10 மடங்​குக்​கு மேல் சொத்து வரி உயர்த்​தப்​பட்​டிருப்​ப​தாக பொது​மக்​கள் புகார் தெரிவித்து வரு​கின்​றனர்.

இது தொடர்​பாக வட சென்னை குடி​யிருப்​போர் நலச்சங்கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்முகம் கூறும்​போது, “வட சென்னை​யில் ஒரு சொத்​தின் உரிமையாளர் இது​வரை அரை​யாண்​டுக்கு 295 ரூபாய் செலுத்தி வந்​தார். இப்​போது 3,255 ரூபாயாக உயர்த்தி மாநக​ராட்சி கடிதம் அனுப்​பி​யுள்​ளது.

இதை கடந்த நிதி​யாண்​டின் 2-ம் அரை​யாண்டு முதல் செலுத்த வேண்​டும் என கூறி​யுள்​ளது. இதன்​படி, கடந்த நிதி​யாண்​டின் 2-ம் அரை​யாண்​டு, நடப்பு நிதி​யாண்​டின் முதல் அரை​யாண்​டு, அக்​டோபரில் 2-ம் அரை​யாண்டு என ஒரு பெரிய தொகையை ஒரு நடுத்தர சொத்து உரிமையாள​ரால் எப்​படி செலுத்த முடி​யும். இந்த சொத்து வரி உயர்​வில் வெளிப்​படைத்​தன்மை இல்​லை” என்​றார்.

சென்​னை​யில் 100 முதல் 300 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்​தப்​பட்​டுள்​ள​தாக முன்​னாள் அமைச்​சர் மா.சுப்பிரமணி​யன் கண்​டனம் தெரி​வித்​திருந்​தார். மாநகராட்சி மேயர் ஆர்​.பிரி​யா​வும், இந்த நடவடிக்​கைக்கு அதிருப்​தியை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், துல்​லிய சொத்​து ​வரி மதிப்​பீட்டை நிறுத்திவைப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்.சமீரன் அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை​யில், Under Assessed எனப்படும் குறை​வான மதிப்பீடு செய்​யப்​பட்​ட​தாக கண்​டறியப்​பட்ட சில சொத்துகளுக்​கான வரி மதிப்​பீட்டை மாற்​றியமைக்​கும் நடவடிக்​கையை மாநக​ராட்சி மேற்​கொண்​டிருந்​தது.

இந்த வரி மாற்​றியமைப்பு குறித்து மறு​பரிசீலனை செய்யுமாறு வலி​யுறுத்​தி, கடந்த சில நாட்​களாக பொதுமக்களிடம் இருந்து பல கோரிக்​கைகள் பெறப்பட்டன. இந்த திருத்​திய மதிப்​பீடு தொடர்​பாக பொது​மக்​கள் எழுப்​பிய கோரிக்​கைகளை கவன​மாக ஆய்வு செய்த பிறகு, வரி மாற்​றியமைப்பை உடனடி​யாக நிறுத்​திவைக்க மாநக​ராட்சி முடிவு செய்​துள்​ளது.

இதன்​படி, வரித் ​தொகை​யானது மாற்​றி அமைக்கப்படுவதற்கு முன்பு நடை​முறை​யில் இருந்த அளவுக்கே மீண்​டும் மாற்​றப்​படும். மாற்​றியமைக்​கப்​பட்ட வரித்​தொகையை ஏற்​கெனவே செலுத்​தி​ய​வர்​களுக்​கு, அந்தத் ​தொகை அடுத்​தடுத்த அரை​யாண்​டு​களுக்​கான முன்பண வரி​யாக ஈடு செய்​யப்​படும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT