அரசியல்

ஓபிஎஸ்ஸுக்கு ‘அக்னி பரீட்சை’ - போடியில் தேர்தல் யுத்தம்!

அரசியல் எதிர்காலத்துக்காக செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

போடியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நின்று காலம் காலமாக தேர்தல் வேலை பார்த்த திமுகவினர், இந்த முறை அவரை ஆதரித்தும், ஆதரவாக நின்று வேலைபார்த்த அதிமுகவினர் எதிராகவும் நின்று தேர்தல் பணியாற்றும் விசித்திர நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெறுவது, அவரது அரசியல் வாழ்வைத் தொடர மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதிமுகவில் ஜெயலலி தாவுக்கு அடுத்த இடத்திலும், அவரது மறைவுக்குப் பிறகு பழனிசாமிக்கு அடுத்த இடத் திலும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகவும், துணை முதல்வராகவும் செல்வாக்காக இருந்தவர்.

பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் முதல்வராக இருந்த ஒருவர், மாற்றுக்கட்சிக்கு தாவியவர் என்ற வரலாற்றையும் ஓ.பன்னீர் செல்வம் ஏற்படுத்தி உள்ளார். ஆரம்பத்தில் சசிகலாவுக்கு எதிராகவும், அதன்பிறகு பழனிசாமிக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தர்ம யுத்தத்துக்கு தூண்டி விட்டனர்.

          

இதை வைத்திலிங்கமும், மனோஜ்பாண்டியனும் திமுகவில் தனியாகச் சென்று சேர்ந்தபோது ஓ.பன்னீர் செல்வமே, வெளிப்படை யாக பேசினார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தென் மாவட்டங் களில் ஏற்பட்ட தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வம் முக்கியக் காரணம் என்று கருதி யதால், எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் சேர தயாராக இருந்தும் அவரை மீண்டும் சேர்க்க பழனிசாமி மறுத்ததாகக் கூறப்படுகிறது.

திமுகவில் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நிற்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது போடியில் மீண்டும் நிற்கப்போவதாக கூறப்படுவதால், இந்த தொகுதியில் கடந்து 5 ஆண்டுகள் வேலை பார்த்து யாராவது போட்டியிடலாம் என நினைத்த திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒருபுறம், ஓ.பன்னீர் செல்வத்தை தோற்கடிக்க அதிமுக, அமமுக, பாஜக வரிந்து கட்டிக்கொண்டு முயற்சி செய்யும் நிலையில், மற்றொருபுறம் அதிமுக அதிகாரப் போட்டியில் பின்னடைவைச் சந்தித்த அவர், தற்போது திமுகவின் ஆதரவுடன் தன் அரசியல் இருப்பைத் தக்கவைக்க, போடி தொகுதியின் வெற்றி அவருக்கு மிகப்பெரிய சவாலாகவும் தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், தென்மாவட்டங்களில் தனக்குள்ள செல்வாக்கை, திமுகவில் நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் போடியில் நிற்பது உறுதியாகி உள்ளது. போடியில் 1989-ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக ஒவ்வொரு முறையும் பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர் செல்வம் தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது நான்காவது முறையாக திமுகவில் போட்டியிட உள்ளார். 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுகவில் தங்கதமிழ்செல்வனும், அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வமும் போட்டியிட்டனர்.

இருவரும் அதிமுகவில் இருந்த போது, ஜெயலலிதாவாலேயே தீர்த்து வைக்க முடியாத அளவு இரு துருவங்களாக அரசியல் செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் மீதான அதிருப்தியில் அவர் அமமுகவுக்கு சென்று பின், திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் போடியில் நிற்பது உறுதியாகி உள்ளது. போடியில் 1989-ம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றதால் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக ஒவ்வொரு முறையும் பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர் செல்வம் தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது நான்காவது முறையாக திமுகவில் போட்டியிட உள்ளார். 2021-ம் ஆண்டு தேர்தலில் திமுகவில் தங்கதமிழ்செல்வனும், அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வமும் போட்டியிட்டனர்.

இருவரும் அதிமுகவில் இருந்த போது, ஜெயலலிதாவாலேயே தீர்த்து வைக்க முடியாத அளவு இரு துருவங்களாக அரசியல் செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் மீதான அதிருப்தியில் அவர் அமமுகவுக்கு சென்று பின், திமுகவில் இணைந்துள்ளார்.

தற்போது திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்த நிலையில் கட்சித் தலைமை அறிவுறுத்தலில் வெளியுலகில் அவருடன் இணக்கமாக இருப்பதுபோல செயல்படுகிறார். ஆனால், திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந் ததை தங்கதமிழ்செல்வனும், காலம் காலமாக ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து அரசியல் செய்து வந்த திமுகவினரும் ரசிக்கவில்லை.

இதுகுறித்து உள்ளூர் திமுகவினர் கூறுகையில், ‘‘திமுக பார்த்து அவரை போடியில் நிறுத்தி வெற்றிபெற வைத்தால் உண்டு. ஆனால், இவர் கட்சியில் சேர்ந்ததை விரும்பாத திமுகவினர் உள்ளடி வேலை பார்ப்பர். 3 முறை போடி எம்எல்ஏவாக இருந்தும், தொகுதிக்கு அவர் பெரிதாக எதுவும் செய்யவில்லை.

உள்ளூரில் நீடிக்கும் அதிருப்தியால் ஓ.பன்னீர்செல்வமே ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியை கேட்டதாகவும், ஆனால், திமுக தலைமை போடியில் நிற்க வலியுறுத்தியதாகவும், அதனாலேயே அவர் போடி தொகுதிக்கான நேர்காணலில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகள் கட்சி வேலை பார்த்து வந்த யாராவது நிற்கலாம் என திமுகவினர் நினைத்திருந்தனர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் வந்து நிற்பதை திமுகவினராலேயே ஏற்க முடியவில்லை’’ என்றனர்.

அதிமுகவினர் கூறுகையில், ‘‘அதிமுகவில் இத்தொகுதியில் கடந்த முறை தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நாராயணசாமி போட்டியிடும் வாய்ப்பு அதிகம்.

ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்தவரை, அவரால் நாராய ணசாமி வளர முடியாமல் தவித்து வந்த நிலையில் அவரது அரசியல் வாழ்க்கைக்கு இந்த தேர்தல் வெற்றி முக்கியமானது.

ஓ.பன்னீர்செல்வமும் வெற்றி பெற்றால்தான் அவரது அரசியல் எதிர்காலம் தொடரும். இல்லாவிட்டால் அவரது அரசியல் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடும். அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர பழனிசாமி தலைமையிலான அதிமுக முக்கிய கவனம் தரும்” என்றனர்.

SCROLL FOR NEXT