அரசியல்

பாஜக வாக்கு வேட்டை... அசாம் தேர்தல் களம் எப்படி?

செய்திப்பிரிவு

அசாம் மாநில சட்​டப்​பேர​வை​யிலுள்ள 126 தொகு​திகளுக்கு ஏப்​ரல் 9-ம் தேதி தேர்தல் நடை​பெறவுள்​ளது. ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று அசாமின் வெற்​றிகர​மான முதல்​வ​ராக வலம் வரு​கிறார். அசாம் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க 65 தொகு​தி​கள் தேவை.

இந்​தத் தேர்​தலில் முக்​கிய பிரச்​சா​ர​மாக, கடந்த ஆண்டு மர்​ம​மான முறை​யில் இறந்த பிரபல பாடகர் ஜூபின் கார்கின் விவ​காரம் உள்ளது. இரு கட்​சிகளுமே அந்​தப் பிரச்​சா​ரத்தை முன்​னெடுத்து வரு​கின்​றன.

அது​மட்​டுமல்​லாமல் பாஜக மேலிடம் ‘ஜதி மதி பேட்​டி’ என்ற பிரச்​சா​ரத்​தைக் கையில் எடுத்​துள்​ளது. இது அசாம் மாநிலத்​தில், பெரும்​பாலும் சட்​ட​விரோதக் குடியேற்றத்தை எதிர்த்​துப் போராடும் சூழலில், அங்​குள்ள பூர்​வீக மக்​களின் கலாச்​சார அடை​யாளம், நில உரிமைகள் மற்​றும் தங்​கள் வீடு​களின் மீதான நியாயமான உடைமை ஆகிய​வற்​றைப் பாது​காப்​பதை வலி​யுறுத்​து​வதற்​காகப் பயன்படுத்தப்​படும் ஓர் அரசி​யல் முழக்​க​மாகும். அந்த முழக்​கத்தை முன்​னெடுத்து வாக்கு வேட்​டை​யாடி வரு​கிறது பாஜக.

          

அதே​நேரத்​தில், அசா​முக்கு புதிய தலைமை வேண்​டும். அசாம் முழு​வதுமே பாஜக​வுக்கு எதி​ரான அலை காணப்படு​வ​தாக தனது பிரச்சாரத்​தில் கூறி வரு​கிறார் கவுரவ் கோகோய். முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டுள்​ளார். அதே​நேரத்​தில் அவருக்​குப் போட்​டி​யாக களத்​தில் இறங்கி கடும் சவால் அளித்து வரு​கிறார் கவுரவ் கோகோய்.

இந்​தத் தேர்​தலில் தனி மெஜாரிட்​டி​யுடன் ஆட்​சி​யமைக்க பாஜக மேலிடம் தீவிர பிரச்​சா​ரத்​தில் தலை​வர்​களை இறக்கி விட்​டுள்​ளது. அதே​நேரத்​தில் காங்​கிரஸ் மேலிடம், இழந்த அதி​காரத்தை மீண்​டும் கைப்​பற்​று​வதற்கு தீவிர முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. முதன்​முறை​யாக கவுரவ் கோகோய் சட்​டப் பேர​வைத் தேர்​தலில் களமிறங்கியுள்ளார். இது காங்​கிரஸ் தொண்​டர்​களுக்கு உற்​சாகத்​தைக் கொடுத்​துள்​ளது.

SCROLL FOR NEXT