அரசியல்

அண்ணாமலையின் அடுத்த இன்னிங்ஸ்... நடப்பது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

பாஜக​வில் இருந்து வில​கு​வ​தாக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை டெல்​லி​யில் சந்​தித்து அண்​ணா​மலை ராஜி​னாமா கடிதம் கொடுத்​துள்​ளார். அத்​துடன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை​யும் சந்​தித்து தனது முடிவு குறித்து விளக்​கம் அளித்​துள்ளார். ‘ஆன்​மீகம் மற்​றும் தேசியம்’ ஆகிய​வற்றை இரு கண்​களாகக் கொண்டு புதிய அரசி​யல் இயக்​கம் அல்​லது கட்​சியை அவர் தொடங்க வாய்ப்​புள்​ள​தாக அண்ணாமலையின் ஆதர​வாளர்​கள் உற்​சாகத்​துடன் தெரிவிக்​கின்​றனர்.

அண்​ணா​மலை​யின் இந்த முடி​வைத் தொடர்ந்​து, தமிழக பாஜக​வில் உள்ள அவரது ஆதர​வாளர்​கள் மற்​றும் மாவட்ட நிர்​வாகி​கள் பலர் தங்​களது பதவி​களை ராஜி​னாமா செய்து வரு​கின்​றனர். அண்​ணா​மலை​யின் இந்த அதிரடி நகர்வு தமிழக பாஜக​வுக்​குள் ஒரு பெரும் பிளவை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதன் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT