அரசியல்

இபிஎஸ் Vs சிவிஎஸ் Vs சசிகலா... அதிமுகவை கைப்பற்ற யுத்தம்! - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்​தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.​வி.சண்​முகம், வேலுமணி, விஜய​பாஸ்​கர் ஆகியோர் இணைந்து ஒரு அணியை உரு​வாக்​கி​னர். சட்டப்​பேரவையில் அதி​முக குழு தலை​வ​ராக எஸ்​.பி வேலுமணி​யை​யும் தேர்வு செய்​தனர். இதற்​கிடையே, பழனி​சாமியை சட்​டப்​பேரவை குழுத் தலை​வ​ராகத் தேர்வு செய்து அவரது தரப்​பினர், தற்​காலிக பேர​வைத் தலைவராக இருந்த கருப்​பை​யா​விடம் கடிதம் வழங்​கினர்.

அதைத்​தொடர்ந்​து, தமிழக அரசு மீதான நம்​பிக்கை வாக்கெடுப்​பில் அரசுக்கு ஆதர​வாக சண்​முகம் தரப்​பினர் வாக்​களித்தனர். இதையடுத்து வேலுமணி, சண்​முகம், விஜய​பாஸ்​கர் உள்ளிட்​டோரின் மாவட்​டச் செயலாளர் பதவியைப் பறித்து பழனி​சாமி உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை ராயப்பேட்​டை​யில் உள்ள அதி​முக அலு​வல​க​மான எம்​ஜிஆர் மாளி​கையை சண்​முகம் தரப்பு கைப்​பற்ற முயற்சிப்​ப​தாகத் தகவல் வெளி​யானது. இதனால் நூற்​றுக்​கணக்​கான போலீ​ஸார் அங்கு குவிக்கப்பட்​டனர்.

இதுகுறித்து செய்​தி​யாளர்களிடம் பேசிய சி.​வி.சண்​முகம், “அ​தி​முக தலைமை அலுவலகத்தை கோயி​லாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். எந்​தச் சூழ்​நிலை​யிலும் எந்​த​வித பாதிப்​பும் ஏற்​படுத்த அனு​ம​திக்க மாட்​டோம். சட்டப்​படி அதி​முகவின் உண்மையான தொண்​டர்கள் நாங்​கள் என்​பதை நிரூபித்த பிறகு​தான் அங்கே எங்​கள் கால்​கள் பதி​யும்” என்​றார்.

இதற்​கிடையே பசுமை வழிச்சாலை​யில் உள்ள பழனிசாமியின் வீட்​டில் நேற்று ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. பின்​னர், பழனி​சாமி தரப்பு எம்எல்ஏக்களான தளவாய் சுந்​தரம், அக்ரிகிருஷ்ண​மூர்த்தி ஆகியோர் பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிரபாகரை சந்​தித்​தனர். அப்போது, “அ​தி​முக கொற​டாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதைத்​தான் அங்​கீகரிக்க வேண்​டும்.சட்​டப்​பேர​வை​யில் தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த எம்​எல்​ஏக்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என கோரிக்கை விடுத்​தனர்.

இதே​போல் சண்​முகம் தரப்பு எம்​எல்​ஏக்​கள் விஜய​பாஸ்​கர், காம​ராஜ் ஆகியோ​ரும் பேரவைத் தலை​வரை சந்​தித்​து, “எங்​கள் தரப்பு சட்டப்​பேரவை உறுப்​பினர்​களின் ஆதர​வுடன் சட்​டப்​பேர​வைக் குழுத் தலைவராக வேலுமணி​யும், கொறடாவாக விஜய​பாஸ்​கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதை அங்​கீகரிக்க வேண்​டும்” என கோரிக்கை வைத்​தனர்.

பிறகு செய்​தி​யாளர்​களிடம் விஜய​பாஸ்​கர் கூறும்​போது, “சட்​டப்​பேர​வை​யில் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்​கள்​தான் சட்​டப்​பேரவைத் தலைவராகவும், கொறடாவாக​வும் இருக்க வேண்​டும். தற்போது எங்​கள் தரப்​பில் இருக்​கும் 25 எம்​எல்ஏக்களின் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும்” என்றார்.

இதற்​கிடையே ஆளுநரை சந்​திப்​ப​தற்​கான முயற்​சி​யில் பழனி​சாமி தரப்பு ஈடு​பட்டு வருகிறது. அப்​போது, ‘தவெக ஆட்சி அமைப்​ப​தில் குதிரை பேரம் நடந்துள்​ளது. எனவே இந்த விவகாரத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என புகார் மனு அளிக்கதிட்​ட​மிட்​டுள்​ள​தாகக் கூறப்​படுகிறது.

இத்​தகைய சூழலில், அதி​முகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வேலைகளில் சசிகலா தரப்பில் காய்​கள் நகர்த்​தப்பட்டு வரு​வ​தாக​வும்​ தகவல்​ வெளி​யாகி உள்​ளது.

SCROLL FOR NEXT