பொது

வெள்ளை மாளிகை செய்த ‘திருத்தம்’ என்ன? @ இந்தியா - யுஎஸ் வர்த்தக ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

இந்​தி​யாவை அமெரிக்​கா​விடம் மோடி அரசு விற்றுவிட்டதாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சுமத்​தின. ஆனால் 24 மணி நேரத்​தில் இந்​தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்​தத்​தில் இடம்​பெற்ற சில அம்சங்​களை அமெரிக்கா திருத்தி உள்ளது. இரு நாடு​கள் இடையே​யான வர்த்தக ஒப்பந்தத்தில் கூடு​தல் சலுகைகள் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இந்​தி​யா​வின் வேண்டு​கோள்படி சில முக்​கிய மாற்​றங்​களை வர்த்தக ஒப்​பந்​தத்​தில் செய்து வரு​வ​தாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்​ளது. அனைத்து அம்​சங்​களும் இறுதி செய்யப்​பட்​டபின்பு இந்த ஒப்​பந்​தம் மார்ச் மாதம் மத்தியில் கையெழுத்​தாகும் எனத் தெரி​கிறது.

பருப்பு உற்​பத்​தி​யில் இந்​தியா உலகள​வில் பெரிய நாடாக உள்​ளது. உலகளா​விய பருப்பு உற்​பத்​தி​யில் இந்தியா 25 முதல் 28 சதவீத இடத்தை பெற்​றுள்​ளது. ஆனால் அமெரிக்க பருப்​பு​கள் மீது இந்​தியா விதிக்​கும் 30 சதவீத இறக்குமதி வரியை நீக்க வற்​புறுத்த வேண்​டும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்​வாகத்​துக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்​கள் கடிதம் எழு​தி​யிருந்​தனர். அமெரிக்கா முதலில் வெளி​யிட்ட வர்த்தக ஒப்​பந்த விவரத்​தில் பருப்புகள் மற்றும் அமெரிக்க வேளாண் பொருட்​கள் பற்றி குறிப்பிட்டிருந்​தது. ஆனால் அமெரிக்கா மாற்​றியமைத்து வெளியிட்ட வர்த்தக ஒப்​பந்​தத்​தில் பருப்​பு​கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்​லை.

          

அமெரிக்​கா​விடம் இருந்து 5 ஆண்​டு​களில் 500 பில்​லியன் டாலர் அளவி​லான எரிசக்தி பொருட்​கள், தகவல் தொடர்பு தொழில்​நுட்ப பொருட்​கள், வேளாண் பொருட்​கள், நிலக்கரி மற்​றும் சேவைகளை பெற இந்​தியா உறுதி அளித்​துள்​ள​தாக முதலில் வெளி​யிடப்​பட்ட ஒப்பந்​தத்​தில் அமெரிக்கா கூறி​யிருந்​தது. ஆனால் மாற்​றி அமைக்கப்பட்ட ஒப்​பந்​தத்​தில் வேளாண் பொருட்கள் நீக்கப்​பட்​டுள்​ளன. உறுதி அளித்​துள்​ளது என்ற வார்த்தைக்கு பதிலாக உத்​தேசித்​துள்​ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT