பொது

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கமா?

செய்திப்பிரிவு

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் உள்ள காலி இடங்​களில், பள்ளி மேலாண்​மைக் குழு மூலம் நியமிக்​கப்​பட்ட தற்​காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். குறிப்பாக, பொதுத்​தேர்வு நடை​பெறும் 10-ம் வகுப்பு மற்​றும் பிளஸ்-2 வகுப்​பு​களுக்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டு, ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்​டனர். இந்நிலை​யில், டிஆர்பி மூலம் தேர்வு செய்​யப்​பட்ட முது​நிலை ஆசிரியர்கள், உடற்​கல்வி இயக்​குநர் மற்​றும் கணினி பயிற்​றுநர்​கள் என மொத்​தம் 1,996 பேருக்கு முதல்​வர் ஸ்டா​லின் பணி நியமன ஆணை​களை வழங்​கி, அவர்​கள் பணி​யில் சேர்ந்​துள்​ளனர்.

இதன் எதிரொலியாக, 10 மற்​றும் 12-ம் வகுப்​பு​களுக்கு பாடம் எடுத்து வரும் தற்​காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் நிலை உள்​ளது. அடுத்த மாதம் பொதுத்​தேர்வு நடை​பெற உள்ள நிலை​யில், மாணவர்​களின் கல்வி பாதிக்​காத வகை​யில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்​றோர்​கள், கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். இந்தப் பிரச்சினையை அலசும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.

          
SCROLL FOR NEXT