What is RCB s record in the qualifier matches at IPL Playoffs 
விளையாட்டு

குவாலிபையரில் ஆர்சிபி அணியின் ரெக்கார்டு என்ன? @ IPL Playoffs

Author : செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 2-ம் இடம் பிடித்ததன் மூலம் குவாலிபையர்-1 ஆட்டத்தில் விளையாடுகிறது ஆர்சிபி அணி.

இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினாலும் குவாலிபையர்-2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பும் அந்த அணிக்கு உள்ளது. 

இதன் மூலம் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை கனவு ‘ஈ சாலா’ (இந்த முறை) நிஜமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ஹோம் ஆட்டங்களை காட்டிலும் அவே (Away) ஆட்டங்களில் வெற்றிகளை குவித்துள்ளது.

ஆர்சிபி. பிளே ஆஃப் சுற்று முலான்பூர் மற்றும் அகமதாபாதத்தில் நடைபெறுகிறது.

கடந்த 2011 சீசனில் பிளே ஆஃப் சுற்று அறிமுகமானது. அந்த வகையில் மொத்தம் 5 குவாலிபையர் ஆட்டங்களில் ஆர்சிபி விளையாடி உள்ளது. 

இதில் குவாலிபையர்-1 ஆட்டத்தில் இரண்டு முறை விளையாடி உள்ளது. 2011 சீசனில் சிஎஸ்கே வசம் குவாலிபையர்-1 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. 2016 சீசனில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தியது. 

குவாலிபையர்-2 ஆட்டத்தில் மூன்று முறை ஆர்சிபி விளையாடி உள்ளது. அதில் ஒரு வெற்றி மற்றும் 2 தோல்விகளை பெற்றுள்ளது.

2011 சீசனில் குவாலிபையர்-2 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.

SCROLL FOR NEXT