Players with most fifties in ipl 2025 season From Kohli to Jaiswal 
விளையாட்டு

அதிக அரை சதத்தில் டாப் 5 @ ஐபிஎல் 2025 - கோலி முதல் ஜெய்ஸ்வால் வரை!

Author : செய்திப்பிரிவு

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக அரை சதம் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார், யார் என்பதை பார்ப்போம். இந்த சீசனில் 51 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள சூழலில் இந்த பட்டியலில் கோலி, ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, நடப்பு சீசனில் 11 இன்னிங்ஸில் 500 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 7 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன். 10 இன்னிங்ஸில் 5 அரை சதங்களுடன் 504 ரன்கள் எடுத்துள்ளார். 
 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜாஸ் பட்லர், 470 ரன்களுடன் 5 அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். 

குஜராத் அணியின் கேப்டனான ஷுப்மன் கில், 10 ஆட்டங்களில் 5 அரை சதங்கள் எடுத்துள்ளார். மொத்தம் 465 ரன்களை அவர் ஸ்கோர் செய்துள்ளார். 
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 11 இன்னிங்ஸ் விளையாடி உள்ள ஜெய்ஸ்வால், 5 அரை சதங்களை பதிவு செய்துள்ளார். அவர் மொத்தம் 439 ரன்கள் எடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT