five players who played both for csk and mi in ipl 
விளையாட்டு

சிஎஸ்கே, மும்பை அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் @ ஐபிஎல்

Author : செய்திப்பிரிவு

ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் திகழ்கின்றன. இந்த இரு அணிகளுக்காகவும் ஐபிஎல் விளையாடிய 5 வீரர்கள் குறித்து பார்ப்போம். 
 

மைக்கேல் ஹஸ்ஸி - ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான ஹஸ்ஸி, 2008 முதல் 2013 வரையிலும், 2015 சீசனிலும் சென்னை அணிகக்க விளையாடி உள்ளார்.

2014 சீசனில் மும்பை அணிக்காக  விளையாடினார் ஹஸ்ஸி.

பிராவோ - மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த ஆல்ரவுண்டரான பிராவோ, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2008 முதல் 2010 வரையில் விளையாடினார்.

அதன் பின்னர் 2011 முதல் 2015, 2018 முதல் 2022 வரையில் சிஎஸ்கே அணியின் தவிர்க்க முடியாத வீரர் ஆனார். 

ஹர்பஜன் சிங் - இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் 2008 முதல் 2017-ம் ஆண்டு சீசன் வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

2018 முதல் 2020 வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் ஹர்பஜன் சிங்.

ராயுடு - இந்திய பேட்ஸ்மேன் ராயுடு, 2010 முதல் 2017 சீசன் வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார்.

அதன் பின்னர் 2018 முதல் 2023 வரையில் சிஎஸ்கே அணியில் விளையாடி அசத்தினார் ராயுடு.

டெவால்ட் பிரெவிஸ் - தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் அதிரடி பேட்ஸ்மேனான பிரெவிஸ், 2022 மற்றும் 2024-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி இருந்தார். மொத்தம் 10 ஆட்டங்களில் விளையாடி அவர், 133.72 ஸ்டிரைக் ரேட்டுடன் 230 ரன்கள் சேர்த்திருந்தார்.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவால்ட் பிரெவிஸை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. 

SCROLL FOR NEXT