நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றி தாகத்தை தீர்த்துக் கொண்டது ஆர்சிபி அணி.
சென்னை ரசிகர்களுக்கு தோனி சற்று ஆறுதல் அளித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதில் கடைசி இரண்டு ஓவர்களில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டபோது அரங்கம் அதிர்ந்தது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரட்டமுடியாமல் 20 ஓவர் முடிவில் 146 ரன்களுடன் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. தோனியின் தருணங்கள் இவை... | படங்கள்: ஜோதி ராமலிங்கம்