captains who have won the IPL title 
விளையாட்டு

ஐபிஎல் பட்டம் வென்ற கேப்டன்கள் யார் யார்? - ஒரு ‘க்ளிக்’ பார்வை

Author : செய்திப்பிரிவு

2008 - ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஐபிஎல் சீசனில் பட்டம் வென்றது. 

2009 - ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி இரண்டாவது ஐபிஎல் சீசனில் பட்டம் வென்றது. இந்த சீசன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 

2010 - தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டம் வென்றது. அதன் பின்னர் 2011, 2018, 2021, 2023 என மொத்தம் 5 சீசன்களில் தோனி தலைமையில் சிஎஸ்கே பட்டம் வென்றுள்ளது. 

2012 - கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5-வது ஐபிஎல் சீசனில் பட்டம் வென்றது. 2014 சீசனில் மீண்டும் அவரது தலைமையிலான கொல்கத்தா அணி பட்டம் வென்றது.

2013 - ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக ஐபில் கோப்பை வென்றது. அதன் பின்னர் 2015, 2017, 2019, 2020 என 5 முறை அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி பட்டம் வென்றுள்ளது. 

2016 - டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதுவரை இந்தியர்களை தவிர்த்து வெளிநாட்டினர் கேப்டனாக வழிநடத்திய அணிகளில் மூன்று அணிகள் தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. வார்ன், கில்கிறிஸ்ட், வார்னர் என மூவரும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். 

2022- ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் லீகில் பங்கேற்ற முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 

2024 - ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த 2024 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்துகிறார். 
 

SCROLL FOR NEXT