dhoni to play in his ipl season number 18 a look back to past 
விளையாட்டு

2025 - 2008... தோனியின் ஐபிஎல் பயணம் - ஒரு ரீவைண்ட் பார்வை | போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு

43 வயதான தோனி தனது 18-வது ஐபிஎல் சீசனில் விளையாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். 

கடந்த 2024 சீசனில் நீளமான முடி வைத்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசி சில ஓவர்களில் களத்துக்கு வந்து சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷி படுத்தினார். மொத்தம் 14 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி கேப்டனாக வழிநடத்தி உள்ளார். 

2023 சீசனில் அவரது தலைமையிலான சிஎஸ்கே அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 
 

2022 சீசனில் அணியில் கேப்டன்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சிஎஸ்கே வெளியேறியது. இந்த சீசனில் 232 ரன்களை தோனி எடுத்தார். 
 

2021 சீசனில் தோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. கரோனா பரவல் காரணமாக இந்த சீசனில் பிற்பாதி போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்றது. 
 

2020 சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி பேசி இருந்தார். இந்த சீசனில் 200 ரன்களை தோனி எடுத்தார். 
 

2019 சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார் தோனி. மொத்தம் 416 ரன்கள் எடுத்தார். 
 

2018 சீசனில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் அரங்கில் விளையாடியது. அப்போது மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே. இந்த சீசனில் 455 ரன்களை தோனி எடுத்தார். 
 

2017 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி விளையாடி இருந்தார். அந்த முறை இரண்டாவது இடம் பிடித்து புனே அணி தொடரை நிறைவு செய்தது. அந்த அணிக்காக தோனி 574 ரன்களை 30 போட்டிகளில் எடுத்தார். 
 

2016 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை தோனி கேப்டனாக வழிநடத்தினார். இந்த சீசனில் 284 ரன்களை தோனி எடுத்தார். 
 

2015 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீசனில் 372 ரன்களை தோனி எடுத்தார். 
 

2014 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த சீசனில் 371 ரன்களை தோனி எடுத்தார். 
 

2013 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது சென்னை. இந்த சீசனில் 461 ரன்களை தோனி எடுத்தார். 
 

2012 சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது சிஎஸ்கே. இந்த சீசனில் 358 ரன்களை தோனி எடுத்தார். 
 

2011 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் 392 ரன்களை தோனி எடுத்தார். 
 

2010 சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது தோனி தலைமையிலான சிஎஸ்கே. இந்த சீசனில் 287 ரன்களை தோனி எடுத்தார். 
 

2009 சீசனில் அரை இறுதியில் சிஎஸ்கே விளையாடி இருந்தது. இந்த சீசனில் 332 ரன்களை தோனி எடுத்தார். 
 

ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சீசனான 2008 சீசனில் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே விளையாடி இருந்தது. இந்த சீசனில் 414 ரன்களை தோனி எடுத்தார்.  

SCROLL FOR NEXT