விளையாட்டு

‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ திறப்பு விழா - சிறப்பு ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ (NCG) என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார்.
இதில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்று, மைதானத்தை திறந்து வைத்தார்.
“நான் இங்கு வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நடராஜன் சுவாரஸ்யமான மனிதர். அவரது பயணம் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும். பல வருடத்திற்கு முன்பு அவர் தமிழ்நாட்டுக்காக விளையாடிய போதுதான் நான் பார்த்தேன். தமிழ்நாடு, ஐபிஎல், இந்தியா வரை முன்னேறி காயத்தில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வந்தவர் அவர் - தினேஷ் கார்த்திக்
சின்ன ஊர்களில் இருந்து வந்து பெரிய விஷயம் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தோனி தான். அது போல சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து உலக கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தி உள்ளார் - தினேஷ் கார்த்திக்
SCROLL FOR NEXT