maha kumbh mela sadhu 
ஆன்மிகம்

மகா கும்பமேளாவில் விதவிதமான தோற்றங்களில் கவனம் ஈர்க்கும் சாதுக்கள்!

Author : செய்திப்பிரிவு

உலகின் மிகப் பெரிய மத விழாவான மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. 

வரும் பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் 45 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று ஏற்கெனவே மதிப்பிடப்பட்டுள்ளது.

கங்கை, யமுனை, புராணத்தில் கூறப்பட்ட சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாக கருதப்படும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடி வருகின்றனர். 
 

மகா கும்பமேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 10 கோடியை தாண்டியுள்ளது.

கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. 
 

புனித நீராடுவதிலும், ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 
 

இந்த மகா கும்​பமேளா​வில் துறவி​களுக்காக உள்ள 13 வகை அகாடாக்கள் இங்கு முகாமிட்டு கல்பவாசம் செய்​கின்​றனர்.

அகாடாக்​களில் உள்ள துறவி​களின் செயல்கள் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன.

SCROLL FOR NEXT