பழநி கோயிலுக்கு அலகு குத்​தி, காவடி எடுத்து வந்த பக்தர்.

 
ஆன்மிகம்

தைப்பூச திருவிழா கோலாகலம்: பழநி கோயிலில் 4 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

ரூ.2 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை

ஆ.நல்லசிவன்

பழநி: தைப்​பூசத் திரு​விழாவை முன்​னிட்டு பழநியில் கடந்த 3 நாட்​களில் 4 லட்​சம் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர். சுமார் ரூ.2 கோடிக்கு பஞ்​சாமிர்​தம் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உபகோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் கடந்த ஜன. 26-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தைப்​பூசத் திரு​விழா தொடங்​கியது.

          

இன்று (பிப்​.4) காலை திருஊடல் நிகழ்ச்​சி​யும், இரவு தெப்​பத் தேரோட்​ட​மும் நடை​பெறுகிறது. இரவு 11 மணிக்கு கொடி இறக்​குதலுடன் திரு​விழா நிறைவு பெறுகிறது.

தைப்​பூசத்தை முன்​னிட்​டு, விரதம் இருந்​தும், மாலை அணிந்​தும் பாத​யாத்​திரை​யாக வந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​களால் பழநி நகரமே விழாக்​கோலம் பூண்​டது. இதையொட்​டி, கடந்த ஜன. 31 முதல் பிப். 2-ம் தேதி வரை 3 நாட்​களுக்கு ரூ.20, ரூ.200 ஆகிய சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்​யப்​பட்​டு, அனை​வரும் இலவச தரிசனத்​தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.

அதன்​படி, கடந்த 31-ம் தேதி 1.70 லட்​சம் பேர், 1-ம் தேதி தைப்​பூசத்​தன்று 1.60 லட்​சம் பேர், 2-ம் தேதி 75,000 பேர் என 3 நாட்​களில் மொத்​தம் 4.05 லட்​சம் பேர் சுவாமி தரிசனம் செய்​துள்​ளனர்.

தேவஸ்​தானம் சார்​பில் விற்​பனை செய்​யப்​படும் அபிஷேக பஞ்​சாமிர்​தத்தை அதிக அளவில் பக்​தர்​கள் வாங்​கிச் சென்​றனர். கடந்த ஆண்​டு​களை​விட, தைப்​பூசத்​துக்கு முந்​தைய நாள் மட்​டும் 3.12 லட்​சம் பஞ்​சாமிர்த டப்​பாக்​கள் ரூ.87.29 லட்​சத்​துக்கு விற்​பனை​யாகின.

கடந்த 1-ம் தேதி தைப்​பூசத்​தன்று 1.27 லட்​சம் பஞ்​சாமிர்த டப்​பாக்​கள் ரூ.76.96 லட்​சத்​துக்​கும், 2-ம் தேதி 78,907 பஞ்​சாமிர்த டப்​பாக்​கள் ரூ.34.26 லட்​சத்​துக்​கும் விற்​பனை​யாகி​யுள்​ளன.

இதன்​மூலம் ரூ.1,98,52,180 வரு​வாய் கிடைத்​துள்​ளது. தைப்​பூசம் முடிந்​தும் ஏராள​மான பக்​தர்​கள் பாத​யாத்​திரை​யாக​வும், பால்​குடம், காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும் பழநி கோயிலுக்கு வந்த வண்​ணம் உள்​ளனர்.

SCROLL FOR NEXT