ஆன்மிகம்

தஞ்சாவூர் பெரியகோயில் தேரோட்டம் - புகைப்பட தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
தஞ்சாவூர் பெரியகோயிலில், சித்திரை பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு, ஆரூரா.. தியாகேசா.. என்ற முழக்கத்துடன் தேரைவடம்பிடித்து இழுத்தனர்.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த ஏப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைபெருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், சோமஸ்கந்தர், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர், ஆகிய சுவாமிகள் முத்துமணி அலங்காரத்தில் தேருக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தது.
பின்னர், 16 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர், கமலாம்பாள்எழுந்தருள, தேருக்கு முன்பாக, விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மாள், சண்டிகேஸ்வரர் முத்து மணி அலங்கார சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர் – கமலாம்பாள்எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்துதேரை இழுத்து சென்றனர். தேருக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறைகளை இசைத்தபடியும், பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடிச் சென்றனர். மேலும் சிவ வாத்தியங்களை நூற்றுக்கணக்கானோர் இசைத்துனர். நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகாண்பிக்கப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
SCROLL FOR NEXT