Lok Sabha Elections: People Voted With Passion - Photo Story 
அரசியல்

மக்களவை தேர்தல்: ஆர்வத்துடன் வாக்கு செலுத்திய மக்கள் - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
கோவை நிர்மலா கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கும் மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் மாநகராட்சி ஊழியர்கள். படம் ஜெ மனோகரன்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்குட்பட்ட கல்லப்பாளையம் கிராமத்தில் பதற்றமான வாக்குச்சாவடியான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படங்கள்: எஸ். குரு பிரசாத்
கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஹோலிஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கோவை குண்டுவெடிப்பு கைதி எஸ்ஏ பாஷா வாக்குப்பதிவு செய்தார். படம்.ஜெ.மனோகரன்
கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஹோலிஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கோவை குண்டுவெடிப்பு கைதி எஸ்ஏ பாஷா வாக்குப்பதிவு செய்தார். படம்.ஜெ.மனோகரன்
புதுச்சேரி பாராளுமன்றத் தேர்தலை வாக்குப்பதிவு செய்ய அதிகாலை முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் இன்று வாக்களிக்க காத்திருந்த பொதுமக்கள்
புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வருஷம் காத்திருந்த பொதுமக்கள்
தனது ஜனநாயக கடமை ஆற்ற வந்த மாற்றுத்திறனாளி பெண். இடம்: திலாசுப்பேட்டை, அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளி. படங்கள்: எம் சாம்ராஜ்
SCROLL FOR NEXT