சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சனிக்கிழமை நடைபெற்றது.முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கனிமொழி முன்னிலையில் நடந்த இந்த மாநாட்டில், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உட்பட இந்தியா கூட்டணியின் பெண் தலைவர்கள், சுப்ரியா சுலே, சுஷ்மிதா தேவ், மெகபூபா முஃப்தி, லேஷி சிங், ராக்கி பிர்லா, ஆனி ராஜா, சுபாஷினி அலி, டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.“பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதன் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல, அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.