‘மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும், இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று (ஜூலை 20) வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தக்காளி, பூண்டு, இஞ்சி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்மதுரை பைபாஸ் சாலை பெத்ததானியாபுரத்தில் செல்லூர் கே ராஜு, ராஜன் செல்லப்பா , ஆர் .பி. உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்திகாய்கறி பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் காய்கறிகள் மாலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். | படங்கள்: ஜெ.மனோகரன்அதிமுகவினர் ஆர்ப்பாட்டம். | படங்கள்: எஸ்.சிவா சரவணன், அகிலா ஈஸ்வரன்