ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.ஈரோடு சம்பத் நகரில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.சம்பத் நகர் பிரதான சாலையில் சாலையோரம் வரவேற்பு அளித்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.இந்தப் பிரச்சாரத்தின்போது, குழந்தைகளிடம் கைகுலுக்கி, பெண்களுடன் செல்வி எடுத்துக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.தொடர்ந்து பெரிய வலசு, பாரதி தியேட்டர் சாலை, பேருந்து நிலையம், மஜித் வீதிகளில் வாகனத்தில் சென்றுகொண்டே வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்.கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பேசும்போதுகே.என்.கே. சாலை, மூலப்பட்டறை வழியாக பிராமண பெரிய அக்ரஹாரம் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டே வாக்கு சேகரித்தார் முதல்வர் ஸ்டாலின்.அக்ரஹாரம் பகுதியில் பேசும்போது, “உங்கள் முகத்தில் தோன்றக்கூடிய எழுச்சி, உணர்ச்சி, ஆர்வம், ஆரவாரம் எல்லாம் பார்க்கும்போது, நம்முடைய வேட்பாளர் இளங்கோவன் வெற்றி, சாதாரண வெற்றி அல்ல, ஒரு மகத்தான வெற்றி என்பதை காட்டுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மாலையில் பிரச்சாரத்தை தொடங்கி முனிசிபல் காலனியில் வாகனத்தில் சென்று கொண்டே வாக்கு சேகரித்தார்.முனிசிபல் காலனியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,தொடர்ந்து பன்னீர்செல்வம் பூங்கா வழியாக பெரியார் நகர் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.