மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதன்படி, இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 75 கிலோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். | படங்கள்: ரகுநாதன் எஸ்.ஆர்.