அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய சாமானியர்கள்! - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
சேலம் குகை வீரலட்சுமி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மையத்தில் வாக்களிக்க வந்த 97 வயது மூதாட்டி சவுண்டம்மாள் | படம்:எஸ்.குரு பிரசாத்
கோவை ராஜா வீதி துணி வணிகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள். படம்: ஜெ. மனோகரன்
கோவை ஆர்எஸ் புரம் எஸ்ஆர்பி அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள். | படம்: ஜெ.மனோகரன்
வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள். படம்: வி.எம்.மணிநாதான்.
பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்த முதிய வாக்காளருக்குக் கையுறைகளை அணிவதற்கு உதவிய தேர்தல் பணி தன்னார்வலர்கள். படம்: மு. லெட்சுமி அருண்.
மேலப்பாளையம் முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சுகாதார அலுவலகர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். படங்கள் மு. லெட்சுமி அருண்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வந்த 93 வயதுடைய சுந்தரத்தை வாக்களிக்க மூன்று சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வரும் உதவியாளர்கள்.இடம் அரசு நடுநிலைப்பள்ளி. படம்: எம்.சாம்ராஜ்
விழுப்புரம் மாவட்டம் கேட்டக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நின்றிருந்த பர்தா அணிந்த பெண்கள் கூட்டம்.
மாநகராட்சி தேர்தலில் முதல் முதலாக வாக்குப் பதிவு செய்த மதுரை மணி நகரம் பகுதியைச் சேர்ந்த கமலி. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
முதன்முதலாக வாக்குப் பதிவு செய்ய வந்த மதுரை பிபி குளத்தை சேர்ந்த கல்யாணி. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
SCROLL FOR NEXT