அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கடைசி நாளில் கவனம் ஈர்த்த வேட்புமனு தாக்கல்

Author : செய்திப்பிரிவு
திண்டுக்கல்லில் முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடங்களில் வந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர் திமுக வேட்பாளர்கள் | படம்: கார்த்திகேயன்
கோவையில் அமமுக கட்சி வேட்பாளர் நபிஃபிக் தனது மகளுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடம் அணிவித்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
ராமநாதபுரத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் கடைசி நாளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முண்டியடித்து வந்தனர். | படம்: எல். பாலசந்தர்
கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில், பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டும் விதமாக குதிரையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த  32-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் மகேஷ்வரன் | படம்: ஜெ.மனோகரன்
மதுரை மேற்கு மாநகராட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் வேடமிட்டு 17-வது வார்டுக்கு மனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பாட்ஷா. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
சென்னை 162 வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோத்குமார் மணக் கோலத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
SCROLL FOR NEXT