பேசும் படங்கள்

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளம் - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
கேரளாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும், ஒரு சில பகுதிகளில் ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 11 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு ஆறுகளும் கரைபுரண்டோடுகின்றன.
கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். கண்ணூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 நிவாரண முகாம்களுக்கு ஆயிரக்கணக்கானோர் மாற்றப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.| படங்கள்: துளசி கக்கட், விபு.
SCROLL FOR NEXT