koovagam koothandavar temple festival transgender tie sacred knots 
நிகழ்வுகள்

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டி கொண்ட திருநங்கைகள்! - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை மாலை ஏராளமான திருநங்கைகள் பூசாரி கரங்களால் தாலிக் கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்

திருநங்கைகள் பட்டுப்புடவை அணிந்து, மலர்கள் சூடி, மணப்பெண் கோலத்தில் கோயிலுக்கு வந்தனர். 

மஞ்சள் நாணில் தாலி கோர்த்து கோயில் பூசாரியிடம் கொடுத்து, கூத்தாண்டவரை தன் கணவராகப் பாவித்து தாலி கட்டிக் கொண்டனர். பின்னர், கோயிலை விட்டு வெளியே வந்து கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழந்தனர்.
 

கூத்தாண்டவரை மணம் முடிக்கும் நிகழ்வு மாலை தொடங்கி இரவு வரையிலும் கோயில் வளாகத்தில் தொடர்ந்தது. 

SCROLL FOR NEXT