Thanjavur District Madhakottai Jallikattu - Photo Story 
நிகழ்வுகள்

தஞ்சையில் தெறிக்கவிட்ட ஜல்லிக்கட்டு - புகைப்படத் தொகுப்பு by ஆர்.வெங்கடேஷ்

Author : செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டம் மாதா கோட்டை லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா துவக்கி வைத்தார். படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

களத்தில் மொத்தம் 657 காளைகள், 358 மாடுபிடி வீரர்கள்.

தஞ்சை மாவட்டம் மாதாக்கோட்டையில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று இப்போட்டியில் தஞ்சை, திருச்சி, கோவை, அரியலூர், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 657 காளைகள் கொண்டு வரப்பட்டன.

காளைகளை அடக்க 358 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி உள்ளனர்.

6 சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது.

வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் மெத்தை, சில்வர் பாத்திரம் பரிசாக உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு களத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

முதல் பரிசு பெறும் வீரருக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் சைக்கிள் பரிசாக வழங்கபடுகிறது.

SCROLL FOR NEXT