பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். |படங்கள்: எஸ். குரு பிரசாத்பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மதுரை பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாய்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகள் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். செல்போன் மூலம் மதிப்பெண்களை தெரிந்து கொண்டார்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்திமதுரை மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரியில் 2024 - 25 ஆம் ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வழங்கப்படும் என கல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திஅக்னி நட்சத்திர வெயிலுக்காக மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள பாஜகவின் நீர் மோர் பந்தலும், மதுரை அதிமுக அலுவலகம் அருகே திறக்கப்பட்ட நீர் மோர் பந்தலும், நீரும், மோரும் இன்றி காணப்படுகின்றன. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்திபுதுச்சேரி மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாததால், பாகூர் ஏரியில் வளர்க்கப்படும் மீன்களான ரோகு கட்லா, ஜிலேபி கேன்டை, தேலி வகை மீன்கள் அதிக அளவில் விற்பனைக்காக வந்துள்ளது. | இடம்: மேட்டுப்பாளையம் | படங்கள்: எம்.சாம்ராஜ்பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து, கைப்பேசியில் தங்களது மதிபெண், தேர்வு முடிவை பார்த்த மாணவிகள். | படம்: வி.எம்.மணிநாதன்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதனைத்தொடர்ந்து, வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா.நாகம்மை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்த மாணவிகள். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.