2024 January Tamil Nadu Photo story 
நிகழ்வுகள்

தமிழகத்தில் களைகட்டிய காணும் பொங்கல்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
சேலம் ரெட்டியூரில் காணும் பொங்கலையொட்டி எருதாட்ட விழா நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்தோடி வரும் காளைகளுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்
காணும் பொங்கலையொட்டி கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
ஆரோவில்லை அடுத்த குயிலாப்பாளையத்தில் நடந்த மஞ்சு விரட்டை காண வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
காணும் பொங்கலை முன்னிட்டு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் கூட்டம். | படங்கள்: எஸ். சத்தியசீலன்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் கூட்டம். | படங்கள்: ஆர்.ரவீந்திரன்
காணும் பொங்கலை முன்னிட்டு கிண்டி சிறுவர் பூங்கா வளாகத்தில் உள்ள பாம்பு பண்ணையில் குவிந்த மக்கள் கூட்டம். | படங்கள்: எஸ். சத்தியசீலன்
தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே உள்ள பறவைகள் அருங்காட்சியகத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் அரிய வகை பறவைகளைப் பார்வையிட்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த குயிலாப்பாளையத்தில் நடந்த மஞ்சு விரட்டில் போடப்பட்ட இசை நிகழச்சியில் நடனமாடிய வெளிநாட்டினர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
ஆரோவில்லை அடுத்த குயிலாப்பாளையத்தில் நடந்த மஞ்சு விரட்டை காண வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரின் குழந்தைகள். | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி சஞ்சிவி நகரில் காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இளவட்டக்கல்லை துாக்கும் இளைஞர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
காணும் பொங்கலை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையை பார்க்க வந்த பொதுமக்கள் கூட்டம். | படங்கள்: எம்.சாம்ராஜ்
காணும் பொங்களை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் குயிலாப்பாளையத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட திறளான வெளிநாட்டினர் மற்றும் பொதுமக்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
SCROLL FOR NEXT