2024 January Tamil Nadu Photo story 
நிகழ்வுகள்

புத்தாண்டு கொண்டாட்டமும் நிகழ்வுகளும் | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜன.1, 2024

Author : செய்திப்பிரிவு
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் கேக் வெட்டி உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர். மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி தலைமையிலான போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். |படங்கள்: எஸ். குரு பிரசாத்
மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் உற்சவர். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் உற்சவர். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
தொடர் மழையின் காரணமாக மற்றும் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் கடல் நீர் போல் காட்சி அளிக்கிறது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
தொடர் மழையின் காரணமாக மற்றும் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் கடல் நீர் போல் காட்சி அளிக்கிறது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை அண்ணா நகரில் உள்ள சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளே உள்ள வெங்கடாஜலபதி திருக்கோவில் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை புதூர் லூர்து அன்னை சர்ச்சில் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கி.பி கிடையாது என்பது போலவும் அயோத்தி ராமர் ஆண்டு வாழ்த்துகள் என மதுரை மாநகர் முழுவதும் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
ஆங்கில புத்தாண்டையொட்டி, வேலூர் கோட்டை கோயில், பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் அவர்கள் கொண்டு வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சாலை ஓரங்களில் ஆங்காங்கே விட்டு சென்றாலும், பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததாலும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, வேலூர் கோட்டை பூங்காவில் மாலை குவிந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி. | படம்: வி.எம்.மணிநாதன்.
SCROLL FOR NEXT