நிகழ்வுகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வு முதல் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ டிச.1, 2023

Author : செய்திப்பிரிவு
உலக எய்ட்ஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். அலுவலகம் முன்பாக மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கோவை அண்ணா சிலை சந்திப்பு பகுதியில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு ஆடை அணிந்து பதாகையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர் சேது. | படம்: ஜெ.மனோகரன்
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கோவை மாவட்ட கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் கல்லூரி மாணவர்கள் முகத்தில் வண்ணங்கள் பூசிக்கொண்டு பேரணியாக சென்றனர். | படங்கள்: ஜெ.மனோகரன்
தேசிய மாணவர்படை தொடக்க தினத்தை முன்னிட்டு தூய்மை இந்திய 5வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியன் சார்பில் கோவை வாலங்குளம் குளக்கரையை சுத்தம் செய்யும் கல்லுரி மாணவ மாணவிகள். | படங்கள்: ஜெ.மனோகரன்
SCROLL FOR NEXT