நிகழ்வுகள்

சேலம் அரசு மருத்துவமனையில் தீ முதல் புதுச்சேரி மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.22, 2023

Author : செய்திப்பிரிவு
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பிரிவிலிருந்து நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். | படங்கள்: எஸ். குரு பிரசாத்
மதுரை மாநகராட்சி வைகை தென்கரைச் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.| படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் காவல்துறை ஆணையாளர் ஜெ.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. | படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாநகராட்சி மூலம் குடிநீருக்கான குழாய்கள் போடும் பணி மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை செல்லும் வழியில் சரியாக முடிவடையாததால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை ரயில்வே நிலைய முகப்பு பகுதியில் உள்ள விநாயகர் சிலை அகற்ற முயன்ற ரயில்வே அதிகாரிகளை கண்டித்து மதுரை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
கடல் சீற்றம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை அடுத்து புதுச்சேரி கடலில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியின் காலை முதலே விட்டு விட்டு பெய்த சாரல் மழையின் காரணமாக சாலையின் செல்லும் வாகனஓட்டிகள். | இடம். ரெட்டியார்பாளையம். | படங்கள்: எம்.சாம்ராஜ்
SCROLL FOR NEXT