நிகழ்வுகள்

மதுரை கலைத் திருவிழா முதல் முத்தமிழ் தேர் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ நவ.21, 2023

Author : செய்திப்பிரிவு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பறம்பு மலை பாதுகாப்பு இயக்கம் சார்பாக முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் கண்டறிந்த கிரானைட் ஊழலை உடனே வெளியிட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.| படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை சார்பாக கலைத்திருவிழா ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் இறந்த மீன்கள் அகற்றும் பணி கோவில் நிர்வாகம் சார்பாக நடைபெற்று வருகிறது. | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
கோவை கொடிசியா வளாகத்துக்கு வந்துள்ள பேனா வடிவிலான முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி. மலர் தூவி வரவேற்ற திமுகவினர். | படங்கள்: ஜெ மனோகரன்
SCROLL FOR NEXT