நிகழ்வுகள்

வகை வகையாக வலம் வரும் ‘விநாயகர்’கள் முதல் சேலம் மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ செப்.19, 2023

Author : செய்திப்பிரிவு
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் , துணை ஆணையர் மற்றும் மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் பொது சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர். | படம்: மணிநாதன்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பணம் பெறாதவர்கள் மதுரை மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் அடுத்த ரங்காபுரம் ஏரியூர் பகுதியில் கப்பலில் விநாயகர் அமர்ந்து உள்ளது போல் வைக்கப்பட்டிருந்தது. | படம்: வி.எம்.மணிநாதன்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் ராமர், லக்ஷ்மணன் ஆஞ்சநேயருடன் உள்ளது போல் வைக்கப்பட்டிருந்தது. | படம்: வி.எம்.மணிநாதன்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அயோத்தி ராமர் உடன் விநாயகர் உள்ளது போல் வைக்கப்பட்டிருந்தது. | படம்: வி.எம்.மணிநாதன்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் கொரில்லா மீது விநாயகர் அமர்ந்து உள்ளது போல் வைக்கப்பட்டிருந்தது. | படம்: வி.எம்.மணிநாதன்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் அரசமரப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் வைக்கப்பட்டிருந்த மகாராஜா கணபதி. | படம்: வி.எம்.மணிநாதன்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வேலூர் கொசப்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை. | படம்: வி.எம்.மணிநாதன்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அசைவ உணவுகளை சோதனை செய்து பறிமுதல் செய்தனர்.| படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை கீழமாசி வீதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மகா சபா சார்பாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் பகுதியில் உள்ள செங்கல் சூலையில் புகையால் திணமூச்சுத்திணறி தம்பதியினர் உயிரிழப்பு. | படம்: வி.எம்.மணிநாதன்
சேலம் மெய்யனூர் சாலையில் மழையில் நனைந்தவாறு சென்ற வாகன ஓட்டிகள். | படம்: எஸ். குரு பிரசாத்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை கோவை சிங்காநல்லுர் குளத்தில் கரைத்த இளைஞர்கள். | படம்: ஜெ.மனோகரன்
சேலத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் மூக்கனேரி ஏரியில் கரைத்தனர். | படம்: எஸ். குரு பிரசாத்
சந்திரயான் வடிவிலான விநாயகர் சிலை. | இடம்: சென்னை | படம்: ம.பிரபு
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சென்னை நகரில் பல பகுதிகளில் வைக்கபட்டுள்ள விதவிதமான விநாயகர் சிலைகள் | படங்கள்: ம.பிரபு
SCROLL FOR NEXT