நிகழ்வுகள்

மதுரையில் மக்கள் வெள்ளம் முதல் வேலூர் மழை வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 5, 2023

Author : செய்திப்பிரிவு
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். | படம்:நா.தங்கரத்தினம்.
மதுரை வைகை வடகரை பகுதி ஸ்ரீ திவான் ராமராயர் மண்டபத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வில் ஒருவர் மீது ஒருவர் நீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்த பக்தர்கள். | படம்: நா.தங்கரத்தினம்.
மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா முன்னிட்டு நள்ளிரவிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றன, கலை நிகழ்ச்சிகள் மற்றும் ராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டுகள். | படம்: நா.தங்கரத்தினம்
மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா முன்னிட்டு நள்ளிரவிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் ராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டுக்கள். | படம்: நா. தங்கரத்தினம்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு விடிய விடிய களைகட்டிய மதுரை. | இடம் - மதுரை தல்லாகுளம் கருப்பசாமி கோயில் | படம்: நா.தங்கரத்தினம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி லட்சக்கணக்கான பக்தர்கள் வரவேற்க, வைகை ஆற்றில் இறங்கினார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை வைகை வடகரை பகுதி ஸ்ரீ திவான் ராமராயர் மண்டபத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வில் தங்க குதிரையில் வந்த கள்ளழகரை அழகர் வேடம் அணிந்து தோப்பறைகளில் நிரப்பப்பட்ட நீரை கள்ளழகர் மீது பீய்ச்சி அடித்து வரவேற்ற பக்தர்கள். | படம்: நா. தங்கரத்தினம்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற மக்களிடம் கட்டணம் வசூல் செய்யும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து விசிக கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். | படம்: எம்.சாம்ராஜ்
இந்திய அஞ்சல் துறை சார்பில், கைவினைஞர்கள் ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மற்றும் அஞ்சல் வழி ஏற்றுமதி குறித்த அறிமுகக் கூட்டத்தில் அஞ்சல் துறை குறித்த கையேட்டை வெளியிட்டார், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். | படம்: எம். சாம்ராஜ்
விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு பராசக்தி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபட்ட பக்தர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
காட்பாடியில் 'தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகும் திரையரங்கு முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர். | படம்:வி.எம்.மணிநாதன்.
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானதையொட்டி கோவை புரூக் பீல்டு மாலுக்கு பாதுகாப்பில் உள்ள போலீசார். | படம்: ஜெ.மனோகரன்
தஞ்சாவூரில் உள்ள மராட்டிய அரண்மனை | படம்: ஆர்.வெங்கடேஷ்
மதுரை அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வின்போது ஆபத்தை உணராமல் அழகர் எழுந்தருளல் பகுதிக்கு அருகில் உள்ள தடுப்பணையில் குடம் குடமாக இறங்கிய பொதுமக்கள். | படம்: நா.தங்கரத்தினம்.
வேலூரில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையில் அண்ணா சாலையில் ஊர்ந்து சென்ற வாகனங்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
மதுரையில் சித்திரைத் திருவிழாவின்போது, வைகை ஆற்றில் மூழ்கி 3 பக்தர்களும் உயிரிழந்தனர். தண்ணீர் பீய்ச்சிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், காவிரி ஆற்றில் கஜமோட்சம் வைபவம் நடைபெற்றது. கஜ மோட்சத்தை முன்னிட்டு அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் எழுந்தருளிய நம்பெருமாள். | படம்: ஆர்.வெங்கடேஷ்
SCROLL FOR NEXT