படங்கள் : நா.தங்கரத்தினம்

பொது

தெறிக்கவிட்ட காளைகள்... தீரம் காட்டிய காளையர்கள்! - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு க்ளிக்ஸ்

Author : நா.தங்கரத்தினம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று (ஜன.17) வாடிவாசலில் சீறிப் பாய்ந்தபோது அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் தூக்கி வீசி பந்தாடிய காளைகள், திமிலை சிலிர்த்து தீரம் காட்டிய காளைகளை தீரத்துடன் அடக்கிய காளையர் என பார்வையாளர்களை மெய்சிலிக்க வைத்தது. புகைப்படத் தொகுப்பு இங்கே...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000+ காளைகளுடன் 900 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து லாவகமாக அடக்கினர்.

சில காளைகள் வீரர்களை பக்கத்தில் நெருங்க விடாமல் பாய்ந்து சென்றன. முரட்டுக் காளைகளை வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.

ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் நின்று களமாடின.

ஒவ்வொரு சுற்றிலும் 100 காளைகள் வரை அவிழ்க்கப்பட்டன.

ஒரு சுற்றுக்கு சுமார் 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

சுற்றுவாரியாக அதிக காளைகளை பிடித்த வீரர்கள் இறுதிச் சுற்றில் அனுமதிக்கப்பட்டனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கும் தங்க காசு, மோதிரம், தங்க நாணயம், வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், மெத்தை, சேர், டிவி, வாஷிங் மிஷன், மிக்சி, கிரைண்டர் போன்ற ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வத்துடன் 40 நிமிடங்கள் ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின், சிறந்த காளைகளுக்கும், சிறந்த வீரரகளுக்கும் தங்க மோதிரம், தங்க நாணயம் பரிசுகளை வழங்கினர்.

சிறந்த வீரருக்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள கார், சிறந்த காளைக்கு டிராக்டர் என மொத்தம் ஜல்லிக்கட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2 கோடிக்கும் அதிகமான பரிசுகள் வழங்கப்பட்டன.

3 காவலர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, காளைகளுக்கான சிறப்பு நவீன சிகிச்சை மற்றும் உயர்தர பயிற்சி மையம் அமைப்பது ஆகிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்

ஜல்லிக்கட்டை பார்க்க அலங்காநல்லூருக்கு அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர்.

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் தனி கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT