உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) காலை 7.40 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும் சுமார் 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்தப் போட்டி மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைந்துள்ள வாடிவாசலில் நடைபெறுகிறது.
போட்டியை தமிழக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர் பரிசு பெற்று செல்கிறார்.
மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்கியது.