நடிகை சம்யுக்தா - கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமண நிகழ்வு.

 
சினிமா

சம்யுக்தா - அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமண ஆல்பம்!

Author : டெக்ஸ்டர்

 2007-ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் சம்யுக்தா. இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தின் மகன் அனிருத்தா ஶ்ரீகாந்தும் சம்யுக்தாவும் நீண்டநாட்களாக காதலித்து வந்தனர்.

சமீபகாலமாகவே இருவருக்கும் இடையிலான காதல் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தாலும் இருவரும் அதுகுறித்து மவுனம் காத்து வந்தனர்.

சம்யுக்தா - அனிருத்தா இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தாகி விட்ட நிலையில், தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

பிரபல நடிகைகளான ராதிகா, சினேகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இவர்களுக்கு சமூக வலைதளங்களில்வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT