‘கங்குபாய் காதியவாடி’ உள்ளிட்ட படங்கள் மூலம் பாலிவுட்டின் தனக்கென தனியிடத்தில் வீற்றிருக்கும் நடிகை ஆலியா பட், ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகி இப்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேன்ஸ் பட விழாவின் சிவப்புக் கம்பளத்தில் வலம் வந்து கவனம் ஈர்த்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.